டெல்லி,நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து நிர்பயாவின் தாயார் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது பெருமையாகஉள்ளது.
இந்தியாவின் மகள்களுக்கான, அவர்களின் நீதிக்கான எங்கள் போராட்டம் தொடரும். நீதிக்கான எங்கள் காத்திருப்பு வேதனையாக இருந்தது, ஆனால் இறுதியாக எங்களுக்கு நீதி கிடைத்தது. எனது மகளின் புகைப்படத்தை நான் ஆரத்தழுவி கொண்டேன்” என்றார் கண்ணீர் மல்க கூறினார்
" alt="" aria-hidden="true" />