கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் - டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை

சென்னை,


 


கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி வதந்தி பரப்பிய திருச்சி மாணிக்கம், கரூர் பெரியசாமி, திருப்பூர் வெங்கடாசலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சைபர் க்ரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவியது. ஆனால் தமிழக அரசு இதுபோல எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்த தகவலை உண்மை என்று நம்பிய பலரும் மற்றவர்களுக்கு பரப்பி வருகிறார்கள்.இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.


அதில், ‘பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் கொரோனா குறித்து தவறான வதந்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கைவிடுத்துள்ளார்


" alt="" aria-hidden="true" />


Popular posts
மத்திய பிரதேச முதல்வா்பொறுப்பில் இருந்து கமல்நாத் ராஜினாமா செய்தார்
Image
ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Image
கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும் ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன்
Image
கெலமங்கலத்தில் விதிமுறை மீறிய நபர்கள் மீது 62 வழக்குப்பதிவு
Image
தேனி மாவட்டம் கொரோனா எதிரோலி 144 தடை உத்தரவால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு சென்று வர போலிசார் கடும் நடவடிக்கையால் . விவசாயம் மிகுந்த கேள்விக்குறியாகி வரும் அவல நிலை
Image